திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன்!

பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் நண்பர்கள் குழுவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதுடன், பாணந்துறை பின்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.