சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை இலங்கைக்கு நிவாரணமளிக்காது – மூடிஸ் பொருளாதார நிபுணர்

உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும், இலங்கையின் நிலைமை மேலும் கடினமானதாகவே இருக்கும் என மூடீஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு கிட்டத்தட்ட 2.9 பில்லியன் டொலர் நிதியுதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் கண்டிப்பாக இந்த கடன் தொகை இலங்கை நினைப்பது போல் நெருக்கடிக்கு தீர்வாக அமையாது என மூடிஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எவ்வளவு நிதியுதவி அல்லது ஆதரவு வழங்கினாலும், இலங்கையின் நிலைமை இன்னும் கடினமானதாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்