பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்!

டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை விட அதிகமாக அறிவிட்ட 08 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு 55 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை, நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை தாக்கல் செய்த வழக்குகளிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கான துரித இரத்தப் பரிசோதனைக்குரிய உச்சபட்ச கட்டணம் 1200 ரூபாவாகும்.

எனினும், இதற்காக 3000 ரூபாய் வரை கட்டணம் அறிவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

முழுமையான இரத்த பரிசோதனைக்கான உச்சபட்ச கட்டணமாக 400 ரூபா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு 1000 ரூபாய் வரை அறிவிடப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.