எவரது உரிமையையும் பறிக்கப்போவதில்லை – பிரதமர் தினேஷ்
எவரது உரிமையையும் பறிக்காமல் சட்டத்திற்கிணங்க உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவை குறித்து தான் பேசப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் குறித்து பொது நிர்வாக அமைச்சர் என்ற ரீதியில் அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க அடுத்த வாரத்தில் நாம் எதிர்கொள்ளவுள்ள பெரும் நெருக்கடி குறித்தே தானும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை