கஞ்சா செடிகள் வளர்த்தவர் திருகோணமலையில் கைது! 

சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை – நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை – பாலையூற்று முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே நிலாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணியொன்றில் கஞ்சா தோட்டம் ஒன்றை வளர்த்து வருவதாக திருகோணமலை மாவட்ட அரச புலனாய்வு சேவை பணியகத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரால் வீட்டின் பின்புறம் மிக நுணுக்கமாக பயிரிடப்பட்டிருந்த 08 கஞ்சா செடிகள் (உயரம் 08 அங்குலம் முதல் 05 அடி வரை) மற்றும் 1 கிலோ 361 கிரேம் காயவைத்த நிலையில் கஞ்சா செடிகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் 54 (ஏ) கீழ் பயிர்ச்செய்கை மற்றும் கஞ்சா போதைப் பொருள்களைத் தம் வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றங்களின் கீழ் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.