சுற்றுலாவுக்குவந்த ஜேர்மன் பெண்மீது மசாஜ் நிலையத்தில் பாலியல் சேட்டை! ஊழியர் ஒருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மனிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் மசாஜ் நிலைய ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மானிய பெண் ஒருவர் உனவட்டுன மாட்டரம்பவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சனிக்கிpழமை மசாஜ் செய்து கொள்வதற்காக வந்துள்ளார்.

மசாஜ் செய்து கொண்டிருந்த ஊழியர் , பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 65 வயதுடைய ஜேர்மன் பெண் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய 45 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சந்தேக நபரை காலி நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்