தரம் 5 புலமைப் பரிசில் மதிப்பளித்தல் நிகழ்வு!

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு பாடசாலைக் கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ,டம்பெற்றது.

வித்தியாலய முதல்வர் க.,ளங்கோவன் தலைமையில் ,டம்பெற்ற நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக கல்வியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன், தென்மராட்சிக் கல்வி வலய தாபனம் மற்றும் பொது முகாமைத்துவப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அபிராமி ,ராஜதுரை ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

,தன்போது, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற 29 மாணவர்களுக்கும், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 74 மாணவர்களுக்கும், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 88 மாணவர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டது.

மேலும், அவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்கள் மூவருக்கும் ,தன்போது சிறப்பு மதிப்பளிப்பு வழங்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்