தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கோட்டா கோகம போராட்ட காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரான தேசபந்து தென்னகோனை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியின் ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.

இதனை பரிசீலித்த நீதியரசர்கள், தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்தும் விசாரணை செய்ய முடியாது என அறிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்