சீனாவின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா கவலை : வெள்ளை மாளிகை

சீனாவின் செயற்பாடுகள் பல சந்தரப்பங்களில் கவலையடைய செய்கின்றன. குறிப்பாக தென் சீனக் கடலில் அதன் ஆக்கிரமிப்பு நடத்தைகளினால் அமெரிக்கா குறிப்பிடத்தக்க கவலைகளைக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

சீனா தவறான கடல் உரிமைகோரல்களைப் தொடர்வதினால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனை அறிவுசார் திருட்டு என்பதுடன் சில வர்த்தக நடைமுறைகள் பற்றிய கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

சீனாவுடன் அமெரிக்க ஒத்துழைப்பிற்கு இடமுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். அதை நாங்கள் தொடர விரும்புகிறோம். ஆனால் அதைச் செய்வதற்கு, வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும். குறிப்பாக தற்போதைய நிலைமைகள் தீவிரமாக இருக்கும் போது கடினமாகிறது.

கடந்த ஆண்டு இந்திய இராணுவத்திற்கு முக்கியமான உளவுத்தகவலை வழங்கி எல்லையில் சீனர்களை வெற்றிகரமாக சமாளிக்க உதவியது குறித்து கேள்வியெழுப்பிய போது அதற்கு பதிலளிப்பதை மறுத்து விட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்