ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: சாரா ஜஸ்மின் உயிரிழப்பு! மரபணுபரிசோதனை மூலம் உறுதி

உயிர்த்தஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் சாரா ஜஸ்மின் (புலஸ்தினி மகேந்திரன் ) உயிரிழந்துள்ளமை மரபணுபரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சாரா ஜஸ்மின் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருக்கலாம் அல்லது சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் அந்த மாதிரிகளை புலஸ்தினி மகேந்திரனின் தாயாரான ராஜரட்ணம் கவிதாவின் இரத்த மாதிரிகளுடன் ஒப்பிடும் நடவடிக்கை நீதிமன்றம் உத்தரவின் பேரில் இடம்பெற்றது.

இந்த நிலையில் கவிதாவின் மரபணுக்கள் சாய்ந்தமருதுவில் மீட்கப்பட்ட எலும்புகளின் மாதிரிகளுடன் ஒத்துப்போயுள்ளன என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்