பொது மக்களுக்கான சேவைகளை தடையின்றிவழங்க இராணுவம் தயார் அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உறுதி

பொது மக்களுக்கு தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களின் சேவைகளை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அதன் போது குறித்த சேவைகளை வழங்குவதற்காக இராணுவத்தினரை ஈடுபடுத்துவதாகவும், பொதுமக்களுக்கான சேவைகளை எவ்வித தடையும் இன்றி வழங்குவதற்கு இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக இராணுவத்தினருக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்குவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்