மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வாகனேரி வயலை குறி வைத்துள்ள பிள்ளையானுக்கும், பிரதேச செயலகத்தினருக்கும் இதன்போது போராட்டக்காரர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

தமது வயல் காணிகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

போராட்டம் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் அழைத்த வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிரதேச செயலகத்தால் குறித்த வயல் காணி அபகரிக்கப்பட்டு, சோளர் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

      

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.