ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த ஆட்டோ விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலி, நால்வர் காயம்!

புத்தளத்தில் உள்ள அன்னதான நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு சீதுவை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று மாரவிலவில் லொறியுடன் மோதியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

மாரவில ஹத்தினிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சம்பத் கெலும் ஏகநாயக்க என்பவராவார்.

உயிரிழந்தவர் முச்சக்கரவண்டியை செலுத்தியவர் என மாரவில தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்.

34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் 4 மற்றும் 7 வயதுடைய இரண்டு பிள்ளைகள் மற்றும் தாய் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் மாரவில தலைமையக போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்