அரச உத்தியோகத்தர்களின் கடன் கழிப்பனவை பிற்போடுங்கள் – இம்ரான் எம்.பி ஜனாதிபதியிடம் கோரிக்கை

அரச உத்தியோகத்தர்கள் பெற்ற கடனுக்கான ஏப்ரல் மாத கழிப்பனவை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் சகல மக்களுக்குமான பண்டிகை மாதமாகும். இந்தப் பண்டிகைக் காலத்தில் அதிக செலவுகள் ஏற்படுவது இயல்பாகும். இந்நிலையில் கடன் பெற்ற அரச ஊழியர்களின் கடன் கழிப்பனவுகள் போக எஞ்சிய தொகை பண்டிகையை கொண்டாடப் போதுமானதாக இல்லை என பெரும்பாலான அரச ஊழியர்கள் தனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்துக்கான கடன் கழிப்பனவை தள்ளிப்போட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்