8 மோட்டார் சைக்கிள்களை சூட்சுமமான முறையில் திருடிய நபர் கைது!

மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்யும் போர்வையில் சென்று சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 8 மோட்டார் சைக்கிள்களை சூட்சுமமான முறையில் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இந்த மோசடிக்கு பயன்படுத்திய இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் நான்கு சிம் அட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் விற்பனைக்காக இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்ட இடங்களை தேடி மோட்டார் சைக்கிளை பரீட்சிக்கும் போர்வையில் இந்த திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.