கடும் இனவாத கொள்கையுடன் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றது – கஜேந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சிங்கள மயமாக்கலுக்கு என அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்த தொல்பொருள் திணைக்களத்தோடு முப்படைகளின் ஆதரவுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இருப்புக்கள் இல்லாதொழிக்கப்படுகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவர், பௌத்த பிக்குகளுக்கு துப்பாக்கி ஏந்திய மெய்பாதுகாவலர்களை வழங்கியது யார் என்றும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாட்டில் புரையோடி போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பொருளாதார முன்னேற்றத்திற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு தமிழ் முஸ்லிம் சமூகத்தை முழுமையாக கருவறுக்கும் செயற்பாடுகள் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தாம் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்றாலும் இனவாத தலைவர்களை தெரிவு செயவதை சிங்கள மக்கள் இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.