மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள்

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெரியவெள்ளி ஆராதரனைகள் இன்று  (7) இடம்பெற்றது.

கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளை ஸாரான் காசிமின் தலைமையிலான ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பினர் குறிவைத்து தற்கொலை குண்டுதாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பல பேர் காயமடைந்ததுடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 32 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுநாதர் இன்றைய தினம் சிலுவையில் அறையப்பட்ட பெரிய வெள்ளி தினத்தில் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆராதணைகள் இடம்பெற்றது. இதில் பெரும்திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிர்த ஞாயிறு தினம் வரையில் தேவாலயங்களில் இடம்பெறும் ஆராதனைகளின் போது தொடர்ந்து பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்  என பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.