சம்மாந்துறையில் மதஸ்தலம் ஒன்றின் நிர்வாகத் தெரிவில் கைகலப்பு : ஒருவர் பலி!

சம்மாந்துறை பிரதேசத்தில் 65 வயதான மலையடி கிராமம் 4 கிராம சேவையாளர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மதஸ்தலம் ஒன்றின் நிர்வாக தெரிவில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அளவில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக காலம் முடிந்த நிலையில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு சிலர் பெருநாள் முடிந்தவுடன் நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறும், மற்றைய குழுவினர் ஓரிரு தினங்களுக்குள் தெரிவு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியதன் காரணமாகவும் நாளை (ஞாயற்றுக்கிழமை) நிர்வாகத்தை தெரிவு செய்ய முடிவு செய்து கலைந்து வெளியே வரும் போதே இந்த மோதல் இடம் பெற்றதாகத் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்தான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்