சஜித்தை பிரதமராக்க ஜனாதிபதி இணக்கம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்துக்குப் பிரதமர் பதவி வழங்கத் தயார் என ஜனாதிபதி கூறியுள்ளார் எனத் தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என ஜனாதிபதி கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கூறினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபான்மை கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போது இந்த விடயம் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சிறுபான்மை கட்சிகள் உறுதியளித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனித் தனி நபர்களாகவோ தனிக் கட்சிகளாவோ அன்றி சஜித் தலைமையிலான ஒட்டுமொத்த ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதே பொருத்தமானது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்