கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்! – பெண் ஒருவர் காயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரச பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹொரகொல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கல் வீச்சு தாக்குதல் நடத்தியதில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கல் வீச்சில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பஸ் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்ற இருவரை அடையாளம் கண்டு கைது செய்ய மாரவில தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.