உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்- நாளை பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகின்றார் முன்னாள் சட்டமா அதிபர்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளிற்காக நாளை பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டி லிவேராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சதிமுயற்சி குறித்து முன்னாள் சட்டமாஅதிபர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இன்று செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்னாள் சட்டமா அதிபர் தான் பதவியிலிருந்து விலகிய தினத்தன்று தெரிவித்த விடயங்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் அன்று வெளியிட்ட கருத்துக்கள் உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் நம்பகதன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால் முன்னாள் சட்டமா அதிபரை விசாரணைக்குட்படுத்தவேண்டியுள்ளது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.