நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பொதுப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு…

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 17/04/2023 இன்று மாலை 7.00 மணியளவில் நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன் பொது நடைபெற்று முடிந்த பொதுப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன் நிகழ்வுகளுக்கு ஆன்மிக அதிதியாக நற்பிட்டிமுனை கணேஷ்வராலய பிரதம குரு சிவஸ்ரீ. எஸ்.சுதர்சன் குருக்கள் அவர்களும்,பிரதம அதிதிகளாக கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி ரம்சின் பக்கிர்,
பெரிய நிலாவனை விசேட அதிரடிப்படை அதிகாரி R.A.D.P.S.ரட்நாயக்க, நற்பிட்டிமுனை கணேஸ்வராலய மற்றும் பத்திரகாளி அம்மன் ஆலய தலைவர் i.ரவீராஜ், மற்றும் சிறப்பு அதிதிகள், ஆகியோரினால் பொதுப் பரீட்சைகளின் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.