அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ். நல்லூரில் ஆரம்பம்

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் ஆரம்பித்தது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நடைபெறவுள்ள குறித்த யாத்திரை யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய ஐந்து இடங்களில் இருந்து ‘பாசத்திற்கான யாத்திரை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் நாட்டின் 5 இடங்களில் இருந்து ஆரம்பமாகும் ‘பாசத்திற்கான யாத்திரை’ 21 ஆம் திகதி கொழும்பை சென்றடையவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.