சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி…
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களுக்கு எதிரான உடல் அசைவு மாதத்தை முன்னிட்டு 19/04 புதன்கிழமை காலை விழிப்புணர்வு நடைபவனி மேற்கொள்ளப்பட்டது.
“சிறந்த உடற் செயற்பாடும்-ஆரோக்கியமான சுற்றாடலும் “எனும் கருப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியானது சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்றலில் ஆரம்பித்து ஏ9 வீதி ஊடாக பயணித்து சாவகச்சேரி பேருந்து தரிப்பிடத்தில் நிறைவடைந்தது.
விழிப்புணர்வுப் பேரணி நிகழ்வில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சுதோகுமார்,சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சிவசுதன்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,குடும்ப நல உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை