காலிமுகத்திடலில் போராட்டங்களுக்கு தடை தீர்மானித்தமைக்கான காரணம் இதுதானாம்! வஜிர அபேவர்த்தன கூறுகிறார்

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகருக்கு ஏற்றவகையில் அதனை சுற்றியுள்ள சூழலை ஏற்படுத்தவும் அந்த பகுதியில் இருக்கும் ஹோட்டல்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்குமே காலிமுகத்திடலில் போராட்டங்கள் பேரணிகள் நடத்துவதை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

காலிமுகத்திடலை விற்பனை செய்யப்போவதாக பிரசாரம் செய்தே 1996 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தைத் தோல்வியடையச்செய்தார்கள்.

ஆனால் பின்னர் அவ்வாறு பிரசாரம் செய்துவந்தவர்களே சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் நாங்கள் ஆரம்பிக்க இருந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, தற்போது போட்சிட்டி அமைக்க நடவடிக்கை எடுத்தார்கள். எனறாலும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இது சிறந்த வேலைத்திட்டமாகும்.

தற்போது அந்த பிரதேசத்தில் போட்சிற்றி அமைக்கப்படுள்ளதால், அந்த இடம் மற்றும் அதற்கு சூழவுள்ள இடம் போட்டிக்கு பொருத்தமானதாக இருக்கவேண்டும். அங்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது பொருத்தம் இல்லை. போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் தேவையான அளவு மைதானங்கள் இருக்கின்றன. அங்கு இதனை முன்னெடுக்கலாம்.

அத்துடன் காலிமுகத்திடலில் கடந்த காலங்களில ;மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் காரணமாக அந்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் நடவடிக்கைகளுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு மத நடவடிக்கைகளுக்கு மாத்திரம் குறிப்பிட்ட நேர வரையறையுடன் அனுமதி அளித்து ஏனைய களியாட்ட நிகழ்வு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை காலிமுகத்தில் நடத்துவதற்கு தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்தது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.