மனைவியின் பிறந்த நாளில் சஜித் விசேட வழிபாடுகளில்!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனைவி ஜலனி பிரேமதாஸவின் பிறந்தநாளை முன்னிட்டு சோமாவதிய ரஜமகா விகாரையில் விசேட சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

புத்தாண்டு ஆசீர்வாதங்கள் மற்றும் ஜலனி பிரேமதாஸவின் பிறந்தநாளை முன்னிட்டு மேலும் பல விசேட சமய நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சமய நிகழ்ச்சிகளுடன் சங்கத் தட்சிணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மல்வத்து மகாவிஹார பார்ஷ்வ கலாநிதி பஹமுனெய் தர்மகீர்த்தி ஸ்ரீசாரங்கர சுமங்கல , வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதி ரஜமஹா விகாரையின் மகாசங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.

சோமாவதிய ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து மகா சங்கரத்தினரின் ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்