ஒரு கடையில் ஏற்பட்ட தீ பல வர்த்தக நிலையங்களுக்குப் பரவியது : அநுராதபுரத்தில் சம்பவம்

அநுராதபுரம் மார்க்கெட் பிளேஸில் உள்ள கட்டடத் தொகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (20) தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்த அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ வேகமாக பரவியதாகவும், ஒரு கடையில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள பல கடைகளுக்கும் பரவியதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்