“சமூக சிற்பிகள் ” நிறுவனத்தினால் “ரமழான் இப்தார்” நிகழ்வு…

“சமூக சிற்பிகள் ” நிறுவனத்தினால் “ரமழான் இப்தார்” நிகழ்வு அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது “சமூக சிற்பிகள் ” நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் திருமதி.N.நிசாந்தி அவர்களின் தலைமையில் 20/04/2023 இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ரமழான் சிந்தனையினை கல்முனை பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷேஹ் A.M. தௌபீக்(நளீமி) அவர்கள் வழங்கியிருந்தார்.

அத்தோடு இந்த நிகழ்வுக்கு கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களும் மற்றும் சமூக சிற்பிகள் நிறுவனத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் இதன் போது கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்