உயர்வு தாழ்வுமின்றி மனிதநேயத்தை ரமழான் நோன்பு போதிக்கிறது – இ.தொ.கா தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

புனித ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ரமழான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்து செய்தியில்,

இஸ்லாத்தின் புனித நூலான அல்-குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் அனுட்டிக்கப்படும் ஒரு மாத கால ரமழான் நோன்பின் மூலம், மத ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது.

நோன்பு காலத்தில் பிறரது பசி பற்றிய சரியான புரிந்துணர்வுடன், விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாமியர்கள் எவ்வித உயர்வு தாழ்வுமின்றி ஒன்றிணைவார்கள் என்பது நம்பிக்கையாகும்.

இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, அனைவரும் கடைப்பிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட, ஈகைத் திருநாளான இந்த நன்னாளில் இறை ஆசிப்பெற்று இந்நாளை இன்புற்று கொண்டாட வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.