செயற்கை நுண்ணறிவிற்காக பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு –முற்றிலும் புதிய கல்வி முறை – வருடாந்தம் பத்தாயிரம் பொறியியலாளர்கள் – ஜனாதிபதி கருத்து

செயற்கை நுண்ணறிவிற்காக அடுத்த வருடம் பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடுசெய்வதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பில்லியன் ரூபாய் என்பது மிகச்சிறிய தொகை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேவேளை இந்த தொகையை எங்களால் செலவு செய்ய முடியுமா என்ற சந்தேகம் தனக்குள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்களால் செலவு செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அடுத்தவருடமாவது அதனை செலவிடுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உங்களிற்கு இது முற்றிலும் புதிய எதிர்காலம் நாங்கள் இதனை உள்வாங்க தயாராக இருக்கின்றோமா எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர் முற்றிலும் புதிய கல்வி திட்டம் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்தம் பத்தாயிரம் பொறியியலாளர்களை உருவாக்கும் கல்விமுறை குறித்து தான் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 5000 மருத்துவர்களை உருவாக்குவது குறித்தும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரதுறையை இயக்கும் இயந்திரங்களாக தனியார் துறையினர் காணப்படவேண்டும் எனவும் ஜனாதிபதி வேணடுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் பொருளாதாரத்தை திறந்ததும் வளர்ச்சிக்கான பொறுப்பை தனியார் துறையிடம் ஒப்படைகின்றோம் சுமையை நீங்கள்தான் ( தனியார் துறையினர்) சுமக்கப்போகின்றீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம்தான் பொறுப்பு என நான் இனிமேல் தெரிவிக்கவேண்டியநிலை காணப்படாது நீங்கள்தான நிச்சயமாக பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியின் இயந்திரங்களாக தனியார் துறையினர் காணப்படவேண்டும் என நீங்கள் விரும்பினால் நீங்கள் திட்டமொன்றை முன்வையுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்