அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல்! 

அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டது.

பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மணைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் ஒருவருக்கு கடுமையான எச்சரிக்கையுடன் பிணை வழங்கப்பட்டது.

ஏனைய ஐவரையும் எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.