மட்டக்களப்பில் ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராகவும் பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதுடன் மட்டக்களப்பில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக கடைகள் யாவும்  மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்