மோதரையில் சுற்றிவளைக்கப்பட்ட மருந்துகள் உற்பத்தி நிலையம்! 

கொழும்பு 15, மோதரவில் உள்ள சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன் உரிமையாளரின் வீட்டிலிருந்து  மருந்து வகைகள்  மற்றும் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டன எனச்  சந்தேகிகப்படும்  மூலப்பொருள்கள்  என்பன கைப்பற்றப்பட்டன என தேசிய  ஒளடதங்கள்  ஒழுங்குபடுத்தல்  அதிகார சபையின் உணவு மற்றும் மருந்துகள்  பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர்  வலி நிவாரணி மாத்திரைகளை தயாரித்துள்ளார் எனவும், இந்திய மருந்து வகைகளுக்கு  நிகரான மருந்துகளை அவர் தயாரித்துள்ளார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்