2026 இல் கடன் அதிகரிக்கும் உதய கம்மன்பில எச்சரிக்கை 

2022 ஆம் ஆண்டை விட மோசமான நெருக்கடி 2026 இல் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

உள்ளூர் பொருளாதாரத்தைப் பலப்படுத்த இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 2026 ஆம் ஆண்டில் கடன் பாரதூரமான விளைவை அனைவரும் அறிந்துகொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் விவாதத்துக்குத் தேவையான முழுமையான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை பற்றி விவாதம் இடம்பெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தொடு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் ரூபா நெருக்கடிக்குரிய தீர்வே காணப்படுவதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

கடனை செலுத்த 7 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்ற போதும் இந்த ஒப்பந்தத்தில் அதிக கடனைத் தவிர டொலர் நெருக்கடிக்கு தீர்வு கிடையாது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.