கொரிய நாட்டு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு! அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு 

கொரிய நாட்டில் வருட‍மொன்றுக்கு கி‍டைக்கப்பெறும் வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது கிடைக்கப்பெறும் 6,500 வேலைவாய்ப்பு எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொரிய நாட்டு மனிதவள திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அமைச்சர் மனுஷ நாணாயக்கார ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

கொரிய மொழித் தேர்ச்சி பெற்று தற்போது இணையத்தளத்தில் வேலை தேடும் மற்றும் இந்த ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதியன்றுடன் இணையத்தளத்தில் காலாவதியாகும். உற்பத்தி பிரிவு விண்ணப்பதாரிகளில்  600 பேருக்கு கப்பல் கட்டுமான துறையில் வேலைவாய்ப்புக்கள்  வழங்கப்படவுள்ளது.

ஆகவே, கப்பல் கட்டுமான துறைகளில் தொழில் புரிய விரும்புபவர்கள் இந்தத் தொழிலுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.