ஜனாதிபதியின் பிரதானி யாழில்! 

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க மற்றும் இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஐயம் செய்தனர்.

2022ஃ2023 ஆம் ஆண்டின் காலபோக  அரசின் நெல் கொள்வனவு மற்றும் இருப்பினை விநியோகித்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்  குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசி  பகிர்ந்தளித்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.

இந்நிலையில் யாழில் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் முப்படையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்