இரசாயன உரத்தடை விவகாரம்: கோட்டா என்னை மிரட்டினாராம்! முன்னாள் அமைச்சர் சந்திரசேன இப்ப இப்படிக் கூறுகிறார்

இரசாயன உரத்தடைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தால் என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரித்தார் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இரசாயன உரங்களுக்கு  தடைவிதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டின் விவசாயத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விவசாயத்துக்கு மாறும் முன்னைய அரசாங்கத்தின்  முயற்சியின் ஒரு பகுதியாக 2021 மே மாதம் இரசாயன உர தடை நடைமுறைக்கு வந்தது.

எனினும் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியதுடன் நாட்டின் விவசாயத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்