மட்டக்களப்பில் மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை வழங்கக்கோரி கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனிப் பொருள் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்கக்கோரி எங்களையும் வாழ விடுங்கள் என்னும் தொனிப்பொருளில் கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கம் 15 கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை (28)  கல்லடியுள்ள புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க  பணிமனைக்கு முன்னால் அமைச்சரின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டு மண் ஏற்றும் கனரக வாகனங்களுடன் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக மாவட்ட செயலகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் மண் அகழ்வுக்காக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணிமனையினால் வழங்கப்பட்ட மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் நிறுத்தப்பட்டதை கண்டித்து கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதனையடுத்து கல்லடியிலுள்ள  புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணிமனைக்கு முன்னால் சட்டரீதியாக மண் அகழ்வில் ஈடுபடுவர்கள், தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் தமது கனரக வாகனங்களுடன் இன்று காலை 8 மணிக்கு ஒன்று திரண்டனர்.

இதன்போது அகழ்வு அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கு இலஞ்சம் வழங்கும் நடைமுறையை இல்லாமல் செய், அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் அரசியல்வாதிகளின் தலையீட்டை நிறுத்து, சங்கத்தின் ஊடாக சங்க உறுப்புரிமை பெற்றவர்களுக்கு வழங்கு, அரசியல்வாதிகளால் ஆலோசனை வழங்கப்பட்டு அதிகாரிகளினால் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப் பத்திரங்களை மீள் பரிசீலனை செய்து மீள வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுற்றாடல் அமைச்சின் புதிய பொறிமுறைகள் இல்லாமல் செய்து ஊழல் வாதிகளிடம் இருந்து எமது சுற்றாடலை பாதுகாக்க ஜனாதிபதி குழு நியமிக்கவேண்டும், தடுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட அகழ்வு அனுமதிப் பத்திரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் , அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்து தொடர்பாக ஒழுங்கான விசாரணை நடாத்தவேண்டும் அதேவேளை சுற்றாடல் அமைச்சரால் தனிப்பட்ட சிலருக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும்.

சுற்றாடல் அமைச்சரினால் கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட எந்திரி பாரிஸ் நியமனம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும், இந்த தொழிலை நம்பி 10 ஆயிரம் குடும்பம் வாழ்ந்துவருகின்றது போன்ற கோரிக்கைளை முன்வைத்து அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சுற்றாடல் அமைச்சாரின் உருவப் பொம்மைக்கு தீயிட்டு எரித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கல்லடி பாலம் ஊடாக அரசடி சென்று அங்கிருந்து நகர் மணிக்கூட்டுகோபுரம் ஊடாக மாவட்ட செயலகத்தை சென்று பகல் 11.30 மணிவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உதவி அரசாங்க அதிபர் மற்றும் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க மாவட்ட பணிப்பாளர் காரியாலயத்தில் வரை சென்றது.

இதனையடுத்து மாவட்ட செயலக்த்தின் முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உதவி அரசாங்க அதிபர் மற்றும் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் மாவட்ட பணிப்பாளர் காரியாலயங்களில் இருந்து வந்து சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து இதற்கான தீர்வை தமது தலைமைகாரியாலயத்துக்கு அறிவித்து இது தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுதருவாக தெரிவித்ததையடுத்து அவர்களிடம் ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கான மகஜரை கையளித்த ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச்சென்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.