இலங்கையின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தோ – ஜப்பான் ஒத்துழைப்பு சிறந்தது!  ; பாத்ஃபைண்டர் அறக்கட்டளை தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தோ-ஜப்பானிய ஒத்துழைப்பை பரிந்துரைப்பதாக குறிப்பிட்டுள்ள பாத்ஃபைண்டர், இலங்கை – இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்புக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாயம் நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு பங்களிப்பு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக 139 பக்கங்களை கொண்ட விசேட அறிக்கையை  ஜனாதிபதியிடம் கையளித்துள்ள பாத்ஃபைண்டர் அறக்கட்டளையகம், முத்தரப்பு ஒத்துழைப்புகளின் அவசியம் தொடர்பாகப் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

ஆந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு –

இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வறுமை போன்றவற்றால் நாட்டில் குறிப்பிடத்தக்க பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணங்களாக பெரும்பாலும் சமீப காலங்களில் பொருளாதாரக் கொள்கைகளின் தவறான நிர்வாகம், கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் அரசாங்க வருவாயில் ஏற்பட்ட சரிவு என்பன வழிவகுத்தன. இதன் விளைவாக, வரலாறு காணாத பொருளாதார சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

நாட்டின் முன்னேற்றத்தை அச்சுறுத்தும் வகையிலுள்ள பொருளாதாரத்தை மீண்டும் எழுப்புவதற்கான ஆக்கபூர்வமான திட்டங்கள இலங்கைக்கு அவசியமாகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படாமல் தடுக்க நிலையான தீர்வுகள் காணப்பட வேண்டுமானால், சர்வதேச ஒத்துழைப்புடன் அபிவிருத்திக்கான தெளிவான நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாய அணுகுமுறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அதன் கொள்கை திசைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நட்பு நாடுகளுடனான வளர்ச்சி ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கையின் சமீபத்திய கொள்கை உரைகளில் வெளிப்படுகிறது. சர்வதேச அமைப்புகளுடன் ஆலோசனை பெற்று அபிவிருத்தி பாதையில் இலங்கை இறங்க வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக இந்தோ-ஜப்பானிய ஒத்துழைப்புக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாயம் இலங்கையில் பொருளாதார மாற்றத்துக்கு ஆதரவளிக்கும். இந்தியாவுடனான விநியோக இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் மற்றும் படகு போக்குவரத்து ஆகியவற்றின் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட  திட்டங்கள் இலங்கைக்கு பயனளிக்கும். அதே போன்று சுற்றுலா, கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்புகள் இலங்கையின் வளர்ச்சி செயல்முறைக்கு, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் முக்கியமானதாக இருக்கும் என பாத்ஃபைண்டர் பரிந்துரைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.