நாடாளுமன்ற உறுப்பினர் பதவி: டயானாவின் மனு விசாரணைக்கு! 

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்காத உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இங்கு, அரசமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி பிரதிவாதிகள் தம்மை பதவியில் இருந்து நீக்குவதற்கு முயற்சித்துள்ளதாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்