வாக்கு கேட்டுவரும் கட்சியின் இலக்கை தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்!) ருவன் விஜேவர்த்தன கோரிக்கை

நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல  அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த கட்சி ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றுபடவேண்டும். மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்ணான்டோ எம்முடன் இணைந்துகொண்டதுபோல் இன்னும் பலர் எம்முடன் இணைந்துகொள்ள இருக்கின்றனர்.

அவர்களையும் இணைத்துக்கொண்டு கட்சியை பலப்படுத்திக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றுபட முன்வரவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் பிரதித் தலைவர் றுவன் விஜேவர்த்தன தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான சலுகைகளை எப்போதும் ஐக்கிய தேசிய கட்சியே வழங்கி வந்தது.

தொழிலாளர்களைப் போராட்டத்துக்கும் பேரணிக்கும் மாத்திரம் ஐக்கிய தேசிய கட்சி பயன்படுத்தியதில்லை.

தொழிலாளர்களுக்கு தேவையான சலுகைகள் மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியுமான சூழலை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டை அவிருத்தியடையச்செய்ய முடியும்.

அத்துடன் கடந்த காலங்களில் இளைஞர்கள் வீதிக்கிறங்கி போராட்டம் செய்துவந்தார்கள். அவர்களின் கோரிக்கையாக இருந்தது. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.

மாற்றத்தை ஏற்படுததுவதாக இருந்தால் அரசியல் கட்சிகளுக்கு நாட்டை கட்டியெழுப்ப  நீண்டகால திட்டங்கள் இருக்கவேண்டும்.

ஆனால் நாட்டை ஆட்சி செய்ய வரும் கட்சிகள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்கி, அவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருகின்றன.

ஆனால் குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச்செய்கின்றன. மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் எனத் தெரிவிப்பவர்கள் வரி கொள்கையை அறிமுகப்படுத்தும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சலுகைகளை மாத்திரமே அவர்கள் எதிர்பார்க்கிறனர்.

அதனால் மக்கள் தேர்தல் காலத்தில் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்கு கேட்டுவரும் கட்சிக்கு, நாட்டை கட்டியெழுப்ப இருக்கும் வேலைத்திட்டம் என்ன, அதற்கான இலக்கு என்ன என்பன தொடர்பில் தெரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி எப்போது ஆட்சிக்கு வரும்போது, நாடடை அபிவிருத்தி செய்யும் நீண்டகால வேலைத்திட்டத்தை தயார்ப்படுத்தியே தேர்தலுக்கு முகம்கொடுத்துவருகிறது.

அதேபோன்றே தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நீண்டகால வேலைத்திட்டத்தைத் தயாரித்து, 2048 ஆம் ஆண்டாகும்போது அபிவிருத்துயடைந்த நாடாக இலங்கையை மாற்றும் இலக்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

அத்துடன் வங்குரோத்து அடைந்த நாட்டையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தபோது, அதனை பெறமுடியாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆனால் 3மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டோம். பாராளுமன்றத்தில் நாணய நிதியத்தின் தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு தெரிவித்தபோது அதற்கு வாக்களிக்காமல் பின்கதவால் சென்றனர்.இவ்வாறு செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

அதனால் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல கட்சி பேதங்களை மறந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த கட்சி ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றுபடவேண்டும்.

கட்சியில் இருந்து பிரிந்துசென்றிருந்த மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் மீண்டும் எம்முடன் இணைந்துகொண்டதுபோல் இன்னும் பலர் எதிர்காலத்தில் எம்முடன் இணைந்துகொள்ள இருக்கின்றனர். அவர்களையும் இணைத்துக்கொண்டு கட்சியை பலப்படுத்திக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றுபட முன்வரவேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.