அரசாங்கள் மாறும்போது கொள்கைகளை மாற்றும்! இது பலவீனம் என்கிறார் சாகல

அரசாங்கம் மாறும்போது கொள்கைகளை மாற்றுவது அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் பலவீனம். 2019 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு சென்றபோது, முதன்மைக் கணக்கில்  மேலதிகம் இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொள்கைகள் மாறின. இது நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதியின் பிரதானி சாகல ரத்னாயக்க.

அவர் மேலும் தெரிவித்தவை வஐமாறு –

நெருக்கடியான நேரத்தில், ரணில்; மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.  தலைகீழாக இருந்த வரிக் கொள்கையை மறுசீரமைத்தார். வரிக் கொள்கையை  மாற்றினோம். மறைமுக வரிகள் அதிகரிக்கும் போது  மக்கள் அனைவரும் அதை செலுத்துகிறார்கள். அதை மாற்றும் போது  வலிக்கிறது.  தயக்கத்துடன், நாங்கள் அதை செய்ய வேண்டியிருந்தது. எரிவாயு மற்றும் எண்ணெய் வரிசைகளை அகற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பணவீக்கம் 70 சதவீதமாக இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி பொறுப்பேற்றார். கடந்த மாத இறுதியில்,   பணவீக்கம் 50 சதவீதமாக கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள், பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கமாகக் குறைக்க முயற்சித்து வருகிறோம். பொருள்களின் விலையும் குறைகிறது. எண்ணெய் விலை மேலும் குறையும். இன்னும் சில நாள்களில் எரிவாயு விலை மேலும் குறையும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்கள் காரணமாக நாட்டு மக்களுக்கு இவ்வாறான பலன்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்