அரசியல் கட்சிகள், பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் நன்றி பாராட்டு!

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் நடத்தியமைக்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறப்பாகக் கடமையை செய்தனர் எனவும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

மே தின ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் அனைத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்