பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இன்று சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தென் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுனர்கள் சபையின் 56 வது வருடாந்த கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் நலனுக்கான பொருளாதார பங்காளிப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும் அனைத்து உதவிகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதன்போது நன்றி தெரிவித்தார்.

நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், முக்கிய உலகளாவிய வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் மூத்த அதிகாரிகள் என சுமார் 4,000 பேர் சியோலில் ஒன்றுகூடியுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுனர்கள் சபையின் 56 வது வருடாந்த கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

04 மே 2023 அன்று ஆளுநரின் அலுவல் அமர்வில் சப்ரி அந்தக் காலத்தின் பிற தலையீடுகளில் ஒரு அறிக்கையை வழங்குவார்.

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகரவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்