கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய வைத்திய துறைகள் மேம்பாடு

!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய வைத்திய துறைகளை கட்டியெழுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் உற்பத்திகள் தொழில்சார் பிரேரணைகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இதன் தொடர்ச்சியாக கைரளிய வர்மா மற்றும் களரி சிகிச்சைகளை கல்முனை சுகாதாரப் பிராந்திய மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக இந்தியாவின் கேரள வர்மக்கலை விசேட வைத்திய நிபுணர் மற்றும் அவரின் குழுவினரை கொண்டு  நடமாடும் சேவை நிகழ்வு அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்திய சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக் அமைவாக மிக நீண்ட நாள்களாகத் திட்டமிடப்பட்டு கல்முனை ஆயுர்வேத பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் ஏ நபீலால் இணைப்புச் செய்யப்பட்ட குறித்த நடமாடும் சேவை அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அப்துல் ஹை அவர்களினதும் அவர்களின் குழுவினரும் அர்ப்பணிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

பொதுமக்கள் இந்த நிகழ்வில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றி இருந்தமையால் ஒரு கட்டத்தில் அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை நோயாளிகளால் நிரம்பி வழியும் அளவிற்கு சன நெரிசலைக் காணக் கூடியதாக இருந்தது. எனினும் குறித்த வைத்தியர்கள் மற்றும் குழுவினரின் சிறந்த திட்டமிடலால் நோயாளர்கள் சிறப்பாக பார்வையிடப்பட்டு அவர்களுக்கான ஆலோசனைகளும் மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன

2023.05.07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அட்டாளைசேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் நடைபெற்ற இம்மாபெரும் நடமாடும் சேவையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேதப் பிரிவுகளின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ. நபீல் உட்பட ஏனைய ஆயுர்வேத மற்றும் யூனாணி  வைத்தியர்களும் இந் நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நடமாடும் வைத்திய சேவை நிகழ்விற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.