களுத்துறையில் நிர்வாணமாக மீட்கப்பட்ட மாணவியின் சடலம்! தம்பதி உட்பட மூவருக்கு விளக்கமறியல்
களுத்துறையில் 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியரையும் மற்றுமொருவரையும் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
களுத்துறை நகரின் ரயில் பாதையை அண்மித்த பகுதியில் உள்ள அறைகள் வாடகைக்கு விடப்படும் ஐந்து மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாணமான சடலம் கடந்த 6 ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த சில தகவல்களின்படி மீட்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த மாணவி களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடையவர் எனவும், சடலம் உயிரிழந்தவரின் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












கருத்துக்களேதுமில்லை