நற்பிட்டிமுனை அல் – அக்ஸா வித்தியாலயத்துக்கு குடிநீர் வசதிக்கான நீர்த்தொகுதி வழங்கிவைப்பு!

நூருல் ஹூதா உமர்

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கல்முனை கல்வி வலய நற்பிட்டிமுனை கமுஃகமுஃ அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்திற்கு குடிநீர் வழங்குவதற்கான நீர்த்தொகுதி அமைப்பை அமைத்துத் தருமாறு பாடசாலை அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வை.டபிள்யு.எம்.ஏ. பேரவையின் அனுசரணையில்; கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரால் மிகவும் குறுகிய நாள்களுக்குள் குறித்த நீர்தொகுதி அமைப்பை அமைத்து உத்தியோகபூர்வமாக திறந்து பாடசாலை நிருவாகிகளிடம் கையளித்து வைத்தார்.

மேலும் பாடசாலைக்குத் தேவையாக இருக்ககூடிய மிதிவண்டி வைக்கும் கொட்டில் மற்றும் தொழுவதற்கான அறை வசதிகள் என்பன சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக பாடசாலை நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரக்கன்றுகள் ரஹ்மத் மன்சூரால் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டன.

பாடசாலை அதிபர் எம்.எல்.பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பாடசாலை பிரதி அதிபர் ஏ.எம்.ஜெஸீல், உப அதிபர் என்.எம்.ஸஹாபி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பவுண்டேஷன் உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.