கிண்ணியாவில் இலங்கை வங்கி கிளை புதிய கட்டிடத்தில் திறந்து வைப்பு

இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக, நவீன டிஜிற்றல் தொழில்நுட்பத்துடன் கூடிய இலங்கை வங்கியின் கிண்ணியா கிளை நேற்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

கலை கலாசார நிகழ்வுகளுடன் பிரதம அதிதிகள் பெரும் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாகக் கிளை திறந்து வைத்தனர்.

இதற்கு முதல், புஹாரி சந்திக்கு அருகல், அமையப்பெற்ற இலங்கை வங்கி, தற்போது இல 100, மட்டக்களப்பு ,திருகோணமலை பிரதான வீதி தோனா கடற்கரை பூங்காவுக்கு முன்னால் அமைய பெற்றுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்கும் நோக்குடனும் பல சேவைகளை ஒரே சமயத்தில் வழங்கும் நோக்குடனும் இந்த வங்கியின் செயற்பாடுகள் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் போது பணத்தை வைப்பிலிட்ட வாடிக்கையாளர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் , இலங்கை வங்கியின் (கிழக்கு மாகாணம்) பிரதிப் பொது முகாமையாளர் பியால் டி சில்வா, உதவிப் பொது முகாமையாளர் செல்வி பெ.சி.மார்ட்டின், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி, பிரதேச முகாமையாளர் ஆ.பிரதீபன், மத்திய வங்கி பிரதேச முகாமையாளர் க.பிரபாகரன்,இலங்கை வங்கி கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம், கிண்ணியா இலங்கை வங்கிக் கிளை முகாமையாளர் திருமதி ரம்மியா,கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாண்டோ,ஏனைய கிண்ணியா கிளை வங்கி முகாமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்