கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்களை சந்தித்த ஆளுநர்

நூருள் ஹூதா உமர்

கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் விசேட கூட்டம் திங்கட்கிழமை பிற்பகல் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது, தற்போதைய திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் திட்டங்கள் பற்றி நீண்ட நேரம் ஆளுநர் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்