இறக்காமம் பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி

நூருள் ஹூதா உமர்

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்துவரும் காணி அனுமதிப்பத்திரப் பிரச்சினைகளுக்கு இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களின் வழிகாட்டலில் துரித கதியில் காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.

அந்தவகையில், இறக்காமம்-07 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான காணிக் கச்சேரி நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் காணி உத்தியோகத்தர் என்.எல்.எம். மாஹிர், காணிப் பிரிவு உத்தியோகத்தர்களான காணி வெளிக்களப் போதனாசிரியர் எம்.பி. சாதிக், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம். சில்மி மற்றும் கிராம உத்தியோகத்தர்களான எம்.சீ.எம். சமீர், எம்.ஜே.எம் அதீக் ஆகியோர் கலந்துகொண்டதோடு பொதுமக்களும் வருகைதந்து பயன்பெற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.